விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா?

By Yathrika Jul 07, 2026 03:50 AM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜய்.

இவர் தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என இப்போது அரசியலில் களமிறங்கி முதலமைச்சராக பொறுப்பேற்று நிறைய மாற்றங்கள் நிகழ்த்தி வருகிறார்.

இதற்கு இடையில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகும் சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? | Director Lingusamy About Vijay Missed Movies

லிங்குசாமி

விஜய் பொறுப்பேற்றதில் இருந்து நிறைய பிரபலங்கள் சினிமாவிற்காக வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

பலரும் தைரியமாக விஜய்யின் ஆட்சிக்கு தங்களது ஆதரவை கொடுக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி அண்மையில் விஜய் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? | Director Lingusamy About Vijay Missed Movies

அதில் அவர், ரன் படத்தின் கதையை AVM சரவணன் சார் விஜய் சாருக்கு நல்ல இருக்கும்னு சொன்னார். நானும் SAC அவர்களிடம் கதை கூறினேன், ஆனால் அப்போது விஜய் சார் தமிழன் படம் நடித்துக்கொண்டிருந்ததால் செட் ஆகவில்லை.

அதுபோக பொண்ணுங்க பின்னாடி சுத்தற படம் விஜய் சாருக்கு செட் ஆகாது என்று வேண்டாம் சொல்லிட்டாங்க. அதேபோல் சண்டக்கோழி, வேட்டை எல்லாம் விஜய் சார் பண்ண வேண்டிய படம் தான், ஆனால் எல்லாமே மிஸ் ஆகிவிட்டது என கூறியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US