நடிகர் அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்.. இந்த இயக்குநர் இப்படி கூறியுள்ளாரா
அஜித் குமார்
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் முன்னணி நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விடாமுயற்சி.
இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது. வருகிற ஏப்ரல் 10ம் தேதி இப்படத்தை வெளியிடுகின்றனர். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நடிகர் அஜித் குறித்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவருடைய பணிபுரிந்த விதத்தையும், அவருடன் பழகிய விதத்தையும் பேட்டிகளில் பகிர்ந்து இருக்கிறார்கள். அப்படி அஜித்துடன் பணிபுரிந்து, பழகிய இயக்குநர் லிங்குசாமி, அவரை பற்றி பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
லிங்குசாமி வெளிப்படை பேச்சு
இதில், "படத்தின் டப்பிங்கின் போது 50 தடவை பேச சொன்னாலும் பேசுவார். படத்திற்கு தேவையான முழு உழைப்பையும் தருவார். அதுதான் அவருடைய வெற்றிக்கும், தமிழ் சினிமாவில் முதல் இடத்தில் இருக்கவும் காரணம்" என அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி நடிகர் அஜித்தை வைத்து ஜீ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் குறித்து இவர் பேசியுள்ளது தற்போது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.