அஜித்துக்கு வெறி பிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.. பிரபல இயக்குநர் ஓபன் டாக்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது.

அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK 64 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 2026 பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என கூறப்படுகிறது.

திரையுலகில் உள்ள இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என பலரும் அஜித் குறித்து பல கருத்துக்களை பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல இயக்குநர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் அஜித்தின் ரசிகர்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
லிங்குசாமி பேட்டி
அவர் கூறியதாவது: "சினிமா உலகில் அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பவன் கல்யாணுக்கு கூட மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஆனால், குறிப்பாக அஜித்துக்கு மட்டும் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் வேறு. தெலுங்கில் பவன் கல்யாண் ரசிகர்களை விட, அஜித்துக்குதான் அதிகமான வெறி பிடித்த ரசிகர் கூட்டம் இருக்கிறது" என கூறியுள்ளார். அஜித் குறித்து இயக்குநர் லிங்குசாமி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
