என்னது லோகேஷ் கனகராஜிற்கு திருமணம் ஆகி குழந்தையே இருக்கா?- வெளிவந்த விவரம்
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் தனது திரைப்பயணத்தை நண்பருடன் இணைந்து ரூ. 80 ஆயிரம் பய செலவில் ஒரு களம் என்ற படத்தின் மூலம் தொடங்கினார்.
பின் அவர் இயக்கிய முதல் பெரிய திரைப்படம் என்றால் மாநகரம் தான், முதல் படத்திலேயே மக்களின் பெரிய ஆதரவை பெற்றார். அப்படத்திற்கு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகிறார்.
இப்போது விஜய்யுடன் இணைந்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் சென்றுள்ளார்.
குடும்பம்
இதுநாள் வரை லோகேஷ் கனகராஜை பார்த்துவரும் ரசிகர்களுக்கு அவர் திருமணம் ஆகி குழந்தை உள்ளவர் என்பது தெரியாது.
இயக்குனர் ஒரு பேட்டியில், எனக்கு இரண்டாவது படம் கிடைக்கும் வரை நீ வேலைக்குப் போ, அது வரைக்கும் எனக்கு பெரிய வருவாய் இருக்காது என்றேன்.
குழந்தைக்கு ஏழு மாதம் இருக்கும் போதே மனைவி ஒரு வங்கியில் பணியில் சேர்ந்தார். இரண்டரை வருடம் வேலைக்கு சென்றார், முதல் படம் முடிந்து அடுத்த படம் கையெழுத்திட்டதும் ஒரு வாரத்திலேயே அவரை வேலை விடச் செய்தேன்.
இந்தப் புரிதல்தான் என்னைச் சினிமாவில் நிலை நிறுத்தியது என பேசியுள்ளார்.
மறைந்த நடிகர் மயில்சாமியின் மகனை பார்த்துள்ளீர்களா?- இதோ குடும்ப புகைப்படம்

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
