ரஜினி, கமல் முன்னணி நடிகர்கள் யாருமே இல்லை... மணிரத்னம் அடுத்து இயக்கப்போகும் நடிகர் யார் தெரியுமா?
மணிரத்னம்
பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி சாதனை படைத்திருந்தார் மணிரத்னம்.
கல்கி எழுதிய இந்த நாவலை படமாக இயக்க பலரும் முயற்சி செய்ய கடைசியில் மணிரத்னத்தினால் தான் அது முடிந்தது. அந்த பிரம்மாண்ட படத்திற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து தக் லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
34 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது.
புதிய படம்
தற்போது மணிரத்னம் இயக்கப்போகும் புதிய படம் குறித்து சில தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அவரது அடுத்த படத்தின் ஹீரோ எந்த முன்னணி நடிகரும் இல்லையாம்.
இளம் கதாநாயகர்கள் மற்றும் புதுமுகங்களை வைத்து படம் இயக்க இருக்கிறாராம். அதற்கான நடிகர்கள் தேர்வு அறிவிப்பு வெளியாகி வருகிறது. மணிரத்னம் புதிய படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் பேனர் தான் தயாரிக்க இருக்கிறார்கள்.

இலவசமாக கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர் ..கடைக்கு சடலத்துடன் வந்த பயங்கரம் -பகீர் பின்னணி! IBC Tamilnadu
