பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் வாங்கியுள்ள சம்பளம்! அதிர்ச்சியளிக்கும் தகவல்
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே சமீபத்தில் வெளியான இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது வரை இப்படம் ரூ. 250 கோடிக்கும் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம்
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் மணிரத்னம் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி இப்படத்திற்காக 2 வருடங்கள் பணியாற்றியுள்ள மணிரத்னம் சம்பளம் என்று தனியாக அவர் வாங்கவில்லையாம். மேலும் இப்படத்தின் மூலம் வரும் லாபத்தின் அடிபடையில் தான் தனக்கு சம்பளம் ஒதுக்கப்படும் என அவர் ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரிவில்லை, இதனை மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. ஐந்து நாட்களில் இத்தனை கோடியா