மக்களை எச்சரித்த தனுஷ் பட இயக்குனர்.. வைரலாகும் ட்வீட்
திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடிப்பில், மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது.
இதில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்தியா மேனன், ராசி கன்னா, பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்த்னர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் அடித்தது.

எச்சரிக்கை
இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹரின் அடுத்த படத்திற்கான ஆடிஷன் நடைபெறுகிறது எனப் பலரிடம் பொய்யான தகவலை கூறி சில நபர்கள் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் கூறுபடுகிறது.
இதனால் தற்போது மக்களுக்கு எச்சரித்து ஒரு ட்வீட் செய்துள்ளார் மித்ரன் ஆர் ஜவஹர். அதில்," திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்தின் திரைக்கதையை தயார் செய்து கொண்டு இருக்கிறேன்.
வேற எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் சில பொய்யான செய்திகள் இணையத்தில் பரவுகிறது, அதை யாரும் நம்ப வேண்டாம். அடுத்த படத்திற்கான செய்தியை நான் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பேன்" எனக் கூறியுள்ளார்.
#Thiruchitrambalam
— Mithran R Jawahar (@MithranRJawahar) January 7, 2023
படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான scriptவேலைகளில் இருக்கிறேன்.வேறு எந்த படமும் பண்ணவில்லை.என் பெயரில் வெளியிலிருந்து வரும் பொய்யான செய்திகளையோ,விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் Twitterபக்கத்தில் பதிவிடுவேன்???
விஜய் மற்றும் சங்கீதா 22 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறுகிறார்களா?- முற்றுப்புள்ளி வைத்த தகவல்