இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம்
தமிழ் சினிமாவில் நிறைய வளர்ந்து வரும் இயக்குனர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நெல்சன் திலீப்குமார்.
நயன்தாராவை வைத்து முதன் முதலில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கினார், அப்படம் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுக்க அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை கொடுத்தார்.
இப்படம் வசூலில் ரூ. 100 கோடியை தாண்டி சாதனை படைத்தது, சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
அப்படம் ரிலீஸ் நேரத்திலேயே விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வந்தார் நெல்சன், ஆனால் இப்படம் தான் கொஞ்சம் சறுக்கிவிட்டது.
நெல்சன் குடும்பம்
நெல்சன் இப்போது ரஜினியின் 169வது படத்தை இயக்க இருக்கிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர தற்போது இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ மனைவி குழந்தையுடன் எடுத்த அந்த புகைப்படம்,
ரூ. 350 கோடியை தாண்டி விக்ரம் படம் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்- முழு விவரம்