அது போன்ற படங்கள் எடுப்பது மிகவும் கடினம்.. இயக்குநர் உடைத்த ரகசியம்
தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தலைவன் தலைவி.
மண்மணம் மாறாத கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். தலைவன் தலைவி திரைப்படம் வரும் ஜூலை 25ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
மிகவும் கடினம்
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " குடும்ப படம் என்றாலே சீரியல், கிரிஞ் என்று சொல்லி விடுவார்கள். கொஞ்சம் விட்டாலும் அது சீரியலாக மாரிவிடும் என்பது உண்மை தான். அது போன்ற குடும்ப படங்கள் எடுப்பது கடினம்.
கடைகுட்டி சிங்கம் ஓடின உடன், சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படம் எனக்கு பண்ணுங்கள் என்று கேட்டார், அப்படி வந்ததுதான் நம்ம வீட்டு பிள்ளை.
இப்போது தலைவன் தலைவி ஓடியது என்றால், ஹீரோக்கள் இப்படி ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்பார்கள். 'தலைவன் தலைவி' எல்லோருக்குமான படமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
