வெளியானது, நயன்தாராவின் "நெற்றிக்கண்" திரைப்படம் ! இயக்குனர் மிலிந்த் ராவ் ஓபன் டாக்

nayanthara netrikan milind rau
By Kathick Aug 13, 2021 07:30 PM GMT
Report

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள "நெற்றிக்கண்" திரைப்படம் Disney Plus Hotstar தளத்தில் 2021 ஆகஸ்ட் 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் இயக்குநர் மிலிந்த் ராவ் நெற்றிக்கண் படம் குறித்து கூறியதாவது :

எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் இதுபோன்ற வரவேற்பைப் பார்ப்பது எங்கள் குழுவிலுள்ள அனைவருக்கும் பெரிய உற்சாகததை தந்துள்ளது. இதன் அனைத்து பெருமையும் நயன்தாரா அவர்களையே சேரும். இப்படத்தில் அவரது உழைப்பு, நம்பமுடியாத அளவு பிரமிப்பானதாக இருந்தது.

அவர் இப்படத்தில் ஒரு பார்வையற்ற நபராக நடிப்பதால், பார்வையற்றோரிடமிருந்து அவர்களின் அனுமதியுடன் நாங்கள் நிறைய குறிப்புகளைப் பெற்று, அதை படத்தில் பயன்படுத்தினோம். தயாரிப்பாளராக இருந்தபோதிலும், நயன்தாரா மேடம் இந்த வேடத்துடன் பொருந்துகிறாரா என்று சோதனை படப்பிடிப்பை நடத்த விரும்பினார் அதன் படி அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்தோம். அவர் உடல்மொழி பார்வையற்ற ஒருவரை போலவே இருந்தது.

மேலும் அவர் இப்பாத்திரத்தில் மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளார். இத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும் இந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் தந்த உழைப்பு அபாரமானது. மிக கச்சிதமாக, நுணுக்கத்துடன் இந்த பாத்திரத்தை அவர் செய்துள்ளார். பார்வையற்ற பாத்திரம் என்றவுடனேயே இந்த பாத்திரம் எல்லாப்படத்தையும் போல, கருப்பு கண்ணாடி மாட்டி நடமாடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

கண்கள் தான் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி. அதனை முழுதாக வெளிப்படுத்த வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தோம். படப்பிபிடிப்பில் எளிதாக கவனம் சிதறும் ஆனால் அனைத்து தடைகளையும் உடைத்து, நயன்தாரா அவர்கள் கண் தெரியாத ஒருவரை திரையில் அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார். படத்தில் இந்த பாத்திரம் இரண்டு முக்கியமான நிலைகளை கடந்து செல்லும்.

முதலில் அவருடைய கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வையில்லாத அதிர்ச்சியைக் கடந்து செல்லும். அப்போது மிக பலவீனமான நிலையில் இருக்கும். அந்த நிலையை கடந்து அமைதியான நிலையை அந்த பாத்திரம் அடையும். நீண்ட பொதுமுடக்கம் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தபோது, 'இதுவும் கடந்து போகும் பாடலுக்காக அவர் உடல் எடையை குறைத்தது எல்லோரும் அசந்துவிட்டனர் என்று இயக்குனர் கூறியுள்ளார்   

வெளியானது, நயன்தாராவின் "நெற்றிக்கண்" திரைப்படம் ! இயக்குனர் மிலிந்த் ராவ் ஓபன் டாக் | Director Open Talk About Netrikan Movie

வெளியானது, நயன்தாராவின் "நெற்றிக்கண்" திரைப்படம் ! இயக்குனர் மிலிந்த் ராவ் ஓபன் டாக் | Director Open Talk About Netrikan Movie


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US