விஜய்க்கு கதை ரெடி.. 2 வருஷமாக ஃபாலோ பண்றேன், அவர் தான் கூப்பிடனும்: இயக்குனர் பேரரசு
நடிகர் விஜய்யின் சமீபத்திய படமான பீஸ்ட் நெகடிவ் விமர்சனங்களை பெற்றதால் வசூல் பாதிக்கப்பட்டது. போட்டிக்கு வந்த கேஜிஎப் 2 படம் தற்போது வசூல் சாதனைகள் படைத்து வருகிறது.
பீஸ்ட்
பீஸ்ட் படம் தோல்வி அடைய என்ன காரணம் என பல தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதிலும் சிலர் விஜய் திருப்பாச்சி, சிவகாசி போன்ற ஆக்ஷன் சென்டிமென்ட் கதைகளை தேர்வு செய்து நடிக்கலாம் என அட்வைஸ் வேறு கூறி வருகின்றனர்.

பேரரசு பேட்டி
இந்நிலையில் இயக்குனர் பேரரசு தற்போது அளித்திருக்கும் பேட்டியில் தான் விஜய்க்காக கதை தயாராக வைத்து இருப்பதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக அவரை follow செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.
"நான் ரெடி. அவர் தான் கூப்பிட வேண்டும். எனக்கு இடைவெளி விழுந்துவிட்டது. இன்று அவரது மார்க்கெட் வேற லெவல். பட்ஜெட் வேற லெவல்.. இதை எல்லாம் தாண்டி பேரரசுக்கு திறமை இருக்கிறது என அவர் கூப்பிட்டால் நான் ரெடி" என தெரிவித்து உள்ளார்.
"நான் ரெடி - விஜய் சார் அழைத்தால் படம். விஜய் சார் காக 3 கதைகள் தயார் ?" - Director @ARASUPERARASU #Beast #BeastMovie #BeastModeON @actorvijay pic.twitter.com/XF4y4BeyT0
— Actor Vijay Team (@ActorVijayTeam) April 21, 2022