போஸ்பாண்டி, ரஜினி முருகன் யுனிவர்ஸ், வேற லெவல் அப்டேட்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த பிரின்ஸ் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பிரேக் கொடுத்த படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கரம், ரஜினி முருகன். இந்த இரண்டு படங்களையும் இயக்கியது பொன்ராம்.
இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வந்த சீமராஜா பெரும் தோல்வியை சந்தித்தது.
அதன் பிறகு இந்த கூட்டணி இணையவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் பொன்ராம் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன், ரஜினி முருகன் இருவரையும் ஒரு யுனிவர்சில் கொண்டு வந்து ராஜ்கிரண், சத்யராஜ் என இருவரையும் நடிக்க வைத்து ஒரு கதை ரெடி என கூறியுள்ளார்.
பிறகு என்ன சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.