அழகே அழகு சீரியல் படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பிரவீன் பென்னட்... போட்டோஸ் இதோ
அழகே அழகு
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, அதில் ஒட்டுமொத்த பெண்களின் கவனத்தையும் பெற்ற தொடராக உள்ளது அழகே அழகு சீரியல்.
பிரவீன் பென்னட் இயக்கத்தில் 2026, அதாவது இந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 3 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது.
அடக்குமுறை எண்ணம் கொண்ட மாமனார்-மாமியாரிடம் சிக்கிய மதி-மலர் பற்றியும், ஆணாதிக்க எண்ணம் கொண்ட தங்கராசுவிடம் சிக்கியுள்ள ரேவதி என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையாக இந்த சீரியல் உள்ளது.
தவறே செய்யாமல் கணவன் தன்னை அடித்தால் அழுதுகொண்டு இருக்காமல் திருப்பி அடித்த காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் செம வைரலானது.
கொண்டாட்டம்
சீரியல் கதைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பி தளத்தில் கொண்டாட்டம் நடந்துள்ளது.
அதாவது அழகே அழகு சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்டத்தின் பிறந்தநாளை தொடர் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதோ போட்டோ,