96 இரண்டாம் பாகம்.. மனம் திறந்து பேசிய இயக்குனர் பிரேம் குமார்
96
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த 2018 வெளிவந்த திரைப்படம் 96. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரேம் குமார் இயக்கியிருந்தார்.
காதலை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. நடிகை திரிஷாவின் கேரியரில் இப்படமா கம் பேக் ஆக அமைந்தது.
96 படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி, அரவிந்த் இணைந்து நடித்துள்ளனர். மேலும் ராஜ்கிரண், ஸ்ரீவித்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
96 இரண்டாம் பாகம்
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் பிரேம் குமார், 96 இரண்டாம் பாகம் குறித்து மனம்திறந்தார்.
இதில், 96 படத்தின் இரண்டாம் பாகம் காதல் கதை கிடையாது. அது முழுக்க முழுக்க குடும்ப கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது" என கூறியுள்ளார்.
இதன்மூலம் 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்த ரசிகர்ளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
