சிறகடிக்க ஆசை ஆர். சுந்தர்ராஜனின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ
சுந்தர்ராஜன்
தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ஆர். சுந்தர்ராஜன். இவர் பயணங்கள் முடிவதில்லை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், ராஜாத்தி ராஜா, காலமெல்லாம் காத்திருப்பேன் போன்ற பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பல திரைப்படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம். இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த குடும்பஸ்தன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.
குடும்ப புகைப்படம்
தற்போது சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன் அவர்களின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ குடும்ப புகைப்படம் பாருங்க:
இதில் இவருடைய மகன் தீபக் சுந்தரராஜனும் இயக்குநர் ஆவார். விஜய் சேதுபதி நடித்த அனபெல் சேதுபதி படத்தை இவர் இயக்கியுள்ளார். மேலும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப் தொடரின் எழுத்தாளரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.