விஜய் அழுதாலே என்னால பார்க்க முடியாது! சகிக்கல... இயக்குநர் ராஜகுமாரன் ஓபன் டாக்
இயக்குநர் ராஜகுமாரன்
நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ராஜகுமாரன். இதன்பின், விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் போன்ற படங்களை இயக்கினார்.

கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
ஓபன் டாக்
இந்நிலையில், இயக்குநர் ராஜகுமாரன் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, பிகில் படத்தை பார்த்தேன், பிடிச்சிருந்தது. ஆனால், தேறி படத்தை என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. குறிப்பாக விஜய் சாகுற காட்சிகளை எல்லாம் பார்க்க சகிக்கல. விஜய் கண்கலங்கினாலே என்னால் பார்க்க முடியாது. ஏனென்றால் விஜய் மேல் நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவர் அழுதால் அதை பார்க்க முடியல" என பேசியுள்ளார்.