இன்று பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் பா.ரஞ்சித் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
பா.இரஞ்சித்
சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபு உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து அவருக்கு இயக்குனர் அந்தஸ்தை உயர்த்தியது.
அப்படம் அவருக்கு எந்த அளவு வரவேற்பை கொடுத்துள்ளது என்றால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெரும் அளவிற்கு ஒரு முன்னணி இடத்திற்கு சென்றார்.
ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தார். பா.இரஞ்சித் படங்களில் அடித்தட்டு மக்களின் வலியை ஆணித்தனமாக பேசி இருப்பார். அந்த வகையில், கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், இன்று தனது 42 - வது பிறந்தநாளை கொண்டாடும் பா.இரஞ்சித்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கும் ரஞ்சித் சில படங்களை தயாரித்தும் வருகிறார். அதன்படி, இவருக்கு சுமார் ரூ. 43 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.