சித்தா இயக்குநர் அருண் குமாருக்கு திருமணம் முடிந்தது.. நேரில் சென்று வாழ்த்திய பிரலங்கள்
எஸ்.யு. அருண்குமார்
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு. அருண்குமார். இதன்பின் சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கினார்.
இதை தொடர்ந்து இவர் இயக்கிய சித்தா படம் மக்களிடையே மாபெரும் வெற்றியடைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற இப்படத்தை தொடர்ந்து அருண்குமார் விக்ரமுடன் கைகோர்த்தார்.
விக்ரம் - அருண்குமார் கூட்டணியில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற மார்ச் மாதம் வெளிவரவுள்ளது.
திருமணம்
இந்த நிலையில், சித்தா பட இயக்குநர் அருண்குமாருக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் விக்ரம், துஷாரா விஜயன், விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, பால சரவணன், இயக்குநர் சசி, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..