நடிகர் விஜய்யின் பெரியப்பாவை பார்த்துள்ளீர்களா?.. இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பவர் நடிகர் விஜய்.
இவர் தற்போது தனது 68வது படத்தின் வேலைகளை செய்து முடித்துள்ளார், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தான் மாஸாக நடந்து வருகிறது.
அடுத்து விஜய் தனது 69வது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் குறித்து தகவல் வெளியிடுவார் என பார்த்தால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
கடைசியாக விஜய் கேரளாவில் மழையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து வருத்தமாக பதிவு செய்திருந்தார்.
சொந்த ஊர்
பல ஆண்டுகள் கழித்து இயக்குனரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அவருடன் அவரது அண்ணன் ராஜசேகர் அவர்களும் சென்றிருக்கிறார். விஜய்யின் தாத்தா சேனாதிபதி பிள்ளையின் கல்லறை அங்கு தான் உள்ளதாம், அதனை சீர்படுத்த குடும்பத்தினர் முடிவு செய்து அப்போது புதியதாக கட்டியுள்ளனர்.
எனவே குடும்பத்துடன் வழிபட எஸ்.ஏ.சி. அந்தக் கல்லறைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது அண்ணன் ராஜசேகர் புகைப்படம் வெளியாக அட நடிகர் விஜய்யின் பெரியப்பா இவர்தானா என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
