62வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் ஷங்கர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் ஷங்கர்
தமிழ் சினிமா ரசிகர்கள் பிரம்மாண்ட இயக்குனர் என பெருமையாக கொண்டாடப்பட்டவர் ஷங்கர்.
சின்ன வயதில் இருந்தே சினிமா ஆசை இருந்ததால் பெற்றோர்கள் ஆசைப்படி டிப்ளமோ படிப்பை முடித்த ஷங்கர் பின் தனது விருப்பப்படி விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் துணை இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.
அவருடன் பணியாற்றும் போது விசேஷம், பொன்னும் புள்ளையும், வசந்த் ராகம், நீதிக்கு தண்டனை, சீதா போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்னர் 1993ம் ஆண்டு நடிகர் அர்ஜுன்-மதுபாலாவை வைத்து ஜென்டில்மேன் என்ற தரமான படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்தார். முதல் படமே 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.
அதன்பிறகு ஷங்கர் அவர்களின் பயணம் நமக்கு நன்றாக தெரியும். கடைசியாக அவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரணை கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கினார், ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
சொத்து மதிப்பு
சினிமாவில் ஒரு வெற்றி இயக்குனராக கொடிகட்டி பறந்த இவர் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களின் ஒருவராக இருக்கும் ஷங்கர் கேம் சேஞ்சர் என்ற படத்திற்காக மட்டும் சுமார் ரூ. 50 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் ஒரு பிரம்மாண்ட வீடு, அதன் விலை சுமார் 6 கோடி முதல் 8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தும் சம்பாதிக்கும் ஷங்கர் சொத்து மதிப்பு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவர் - யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்? IBC Tamilnadu
