பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கும் ஷங்கரின் முழு சொத்து மதிப்பு... அடேங்கப்பா இத்தனை கோடியா...
இயக்குனர் ஷங்கர்
தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் ஆச்சரியமாக படங்களை வியந்து பார்க்க வைக்கும் ஒரு இயக்குனர் ஷங்கர்.
ஆரம்ப காலத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்ற தொடங்கியவ்ர் கடந்த 1993ம் ஆண்டு இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அர்ஜுனை வைத்து முதன்முதலாக ஜென்டில்மேன் என்ற படத்தை இயக்கினார்.
முதல் படத்தில் பிரம்மாண்ட வெற்றியை கண்டவர், அடுத்து பிரபுதேவாவுடன் கூட்டணி அமைத்து காதலன் படத்தை கொடுத்தார்.
அடுத்து இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன் என வரிசையாக ஹிட் கொடுத்தவர் ரஜினியை வைத்து சிவாஜி, 2.0, விக்ரமை வைத்து ஐ, விஜய்யுடன் நண்பன் போன்ற படங்களை இயக்கினார்.
கடைசியாக ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாகி இருந்தது.
சொத்து மதிப்பு
ஒரு படத்துக்கு ரூ 50 கோடி வரை இப்போது சம்பளம் வாங்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடி என கூறப்படுகிறது. சென்னை மற்றும் மும்பையில் சொகுசு பங்களா உள்ளதாம்.
மும்பையில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ. 6 கோடி வரை இருக்குமாம். ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ள இவர் நிறைய சொகுசு கார்களையும் வைத்துள்ளாராம்.