மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
கேம் சேஞ்சர்
தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர்.
ராம் சரண்-கியாரா அத்வானி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் நேற்று ஜனவரி 10 படு மாஸாக வெளியானது.
ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா நடிப்புக்கு நல்ல பாசிட்டீவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் கதைக்கு நிறைய நெகட்டீவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் 10 நாள் இந்த பொங்கல் விடுமுறையில் படம் வசூலை அள்ளிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் சம்பளம்
இப்படத்தின் பட்ஜெட் ஆரம்பிக்கும் போது போட்ட கணக்கை விட முடிக்கும் போது அதிகமானதால் படக்குழுவினர் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர்.
பெரிய தொகையை சம்பளம் பெறும் இயக்குனர் ஷங்கர் இந்த படத்திற்காக ரூ. 35 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.