ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ

By Yathrika Jun 18, 2026 04:36 PM GMT
Report

ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி ரசிகர்களை வியக்க வைத்தவர் தான் ஷங்கர்.

பிரம்மாண்ட இயக்குனராக வலம்வந்த ஷங்கர் இயக்கத்தில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் சற்று தோல்வியை சந்தித்து வருகின்றன. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸிவ் படு தோல்வியை சந்தித்தன.

இப்போது ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி என்ற படம் தயாராக இருக்கிறது என நிறைய செய்திகள் வருகின்றன, ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. 

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ | Director Shankar Son Arjith Debut Film As Hero

அர்ஜித்

இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா பக்கமே தலைக்காட்டாமல் உள்ளார்.

அவரது 2வது மகள் அதிதி, விருமன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வெற்றிக் கண்டார். தெலுங்கு பக்கமும் சென்று படங்கள் நடிக்கிறார்.

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ | Director Shankar Son Arjith Debut Film As Hero

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோவாக களமிறங்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அட்லியின் உதவி இயக்குனர் இயக்கத்தில் தான் அர்ஜித் புதிய படம் நடிக்க உள்ளாராம், நாயகியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார்.

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ | Director Shankar Son Arjith Debut Film As Hero

சமீபத்தில் இப்பட பூஜை போடப்பட அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US