இயக்குனர் சித்திக் மரணம்! பிரெண்ட்ஸ், காவலன் பட இயக்குனருக்கு ரசிகர்கள் இரங்கல்
மலையாள இயக்குனர் சித்திக் உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்து இருக்கிறார். அவருக்கு வயது 69. சித்திக் மரணத்திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சித்திக் இயக்கிய படங்கள்
இயக்குனர் சித்திக் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களை எடுத்திருக்கிறார். விஜய் நடித்த பிரெண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியது அவர் தான்.
விஜயகாந்த் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற எங்கள் அண்ணா படத்தை இயக்கியதும் அவர் தான்.
இந்த படங்களை கொண்டாடிய ரசிகர்களுக்கு சித்திக்கின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு தான்.

யாருமே எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் லியோ படக்குழு- விஜய் திரைப்பயணத்திலேயே முதல்முறை