துயரமான சம்பவத்தை காட்ட தைரியம் வேண்டும்.. மாரி செல்வராஜை பாராட்டிய இயக்குனர் சுதா கொங்கரா!
வாழை
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் ஆகஸ்ட் -23 வெளிவந்த படம் வாழை.
இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், பொன்வேல் மற்றும் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து வாழை படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
அதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படம் தற்போது வரை நல்ல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
பாராட்டி பேசிய இயக்குனர் சுதா
இந்த நிலையில், வாழை படத்தை பார்த்து விட்டு மாரி செல்வராஜை இயக்குனர் சுதா கொங்கரா பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் சுதா கூறுகையில், இது போன்ற ஒரு அற்புதமான படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு என்னுடைய பாராட்டுகள். தன் வாழ்க்கையில் நடந்த துயரமான சோகமான சம்பவத்தை திரையில் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்ட கண்டிப்பாக தைரியம் வேண்டும். அந்த தைரியம் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களுக்கு மட்டும் தான் உண்டு என பாராட்டியுள்ளார் சுதா.
Listen to what the extraordinary Director @Sudha_Kongara talks about #Vaazhai https://t.co/TEgg387QHs
— Navvi Studios (@navvistudios) August 26, 2024
Book Your Tickets Now!!!! #VaazhaiRunningSuccesfully ?✨#VaazhaiRainingEmotions @mari_selvaraj @Music_Santhosh @ayngaran_offl @navvistudios @disneyplusHSTam… pic.twitter.com/GRf6wll4bT