30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த சுந்தர்.சியின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா?
சுந்தர்.சி
தமிழ் சினிமாவில் எல்லா பிரபலங்களும் எடுத்த உடனே பெரிய இடத்திற்கு வந்துவிடுவதில்லை.
அப்படி இன்று பிரபல இயக்குனர், நடிகர் என கொண்டாடப்படும் சுந்தர்.சி முதலில் தனது சினிமா பயணத்தை உதவி இயக்குனராக தான் தொடங்கியுள்ளார். 1995ம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார்.
எல்லா இயக்குனர்களும் ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள், சுந்தர்.சி தனது படங்களை பார்க்க வருபவர்கள் சந்தோஷமாக சிரிக்க வேண்டும் என எடுப்பார்.
சொத்து மதிப்பு
சமீபத்தில் நடிகையும், சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பு, தனது கணவர் சினிமாவில் நுழைந்து 30 வருடங்கள் ஆன நிலையில் ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியிட்டார், அது வைரலானது.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சுந்தர்.சியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி IBC Tamilnadu
