ரஜினி சாருக்காக எந்த மாற்றமும் செய்யவில்லை..வேட்டையன் படம் குறித்து இயக்குனர் ஞானவேல் கூறிய அதிரடி தகவல்
வேட்டையன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் போன்ற சிறந்த படத்தை இயக்கிய TJ ஞானவேல் இயக்கத்தில் வரும் அக்டோபர் 10 - ம் தேதி இப்படம் வெளிவர உள்ளது.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என ஒரு நட்சத்திர கூட்டம் நடித்துள்ளது.
சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கபூர், அக்கினேனி குடும்பம் இல்லை.. இந்தியாவின் பணக்கார குடும்பம் எது தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா
ரஜினி குறித்து ஞானவேல்
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்தும் வேட்டையன் படம் குறித்தும் இயக்குனர் ஞானவேல் சில தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், "நான் ரஜினி சாருக்காக இந்த படத்தில் சில மாற்றங்கள் செய்தால் அது சரியாக வராது. அதுபோல் வேட்டையன் படத்திற்காக ரஜினி சார் அவர் குணத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று நானும் நினைக்க கூடாது.
ரஜினி சார் இன்று முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்க முக்கிய காரணம் அவரது இயல்பு, ஸ்டைல் என எல்லாம் சேர்த்து தான்.
அந்த வகையில், ரஜினி சாரின் இமேஜ், அவர் கடின உழைப்பால் உருவாக்கிய சாம்ராஜ்யத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் இந்த படத்தை எடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.