முதல் படத்தின் மாபெரும் வெற்றி! பல கோடி உயர்ந்த இயக்குனர் தமிழரசன் சம்பளம்
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து
தமிழரசன் பச்சமுத்து என்பவர் லப்பர் பந்து படத்தின் மூலம் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார். நேர்த்தியான இயக்கத்தின் மூலம் லப்பர் பந்து திரைப்படத்தை அனைவரையும் ரசிக்க வைத்தார்.
இப்படம் உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸில் மாற்றமா.. உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்! வைரலாகும் அஜித்தின் புகைப்படம்
இரண்டாவது படத்தின் சம்பளம்
இந்த நிலையில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்திற்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இப்படத்திற்காக அவர் வாங்கவிருக்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தனது அடுத்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக பண்ணபோகிறாராம்.
இப்படத்திற்காக முதலில் ரூ. 1 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. பின் ஏஜிஎஸ் போன்ற பெரிய நிறுவனம் தமிழரசன் பச்சமுத்துவை அணுகி, சம்பளம் ரூ. 3 கோடி தருகிறோம், எங்களுக்கு படம் பண்ணுங்க என கூறியுள்ளனர்.
இதன்பின், டான் பிக்சர்ஸ் நிறுவனம் நீங்க எங்களுக்கு தான் படம் பண்ணனும் சம்பளம் குறைவு என்று நினைக்காதீங்க, ரூ. 3 கோடி சம்பளம் தருகிறோம் என பேசி, தமிழரசன் பச்சமுத்துவை கமிட் செய்துள்ளனர். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.