எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் கதாபாத்திரம் எப்போது வரை வரும்- ரகசியத்தை சொன்ன இயக்குனர்
எதிர்நீச்சல் சீரியல்
தமிழ் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக எதிர்நீச்சல் அமைந்துள்ளது. காரணம் விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளும் தான்.
இந்த சீரியலை கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார்.
தொடரில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் நடிக்கிறார். இப்போது கதையில் சொத்து பிரச்சனை பற்றி தான் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது,
ஜீவானந்தம் யார் என்பதும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இனி வரும் கதைக்களம்
அண்மையில் ஒரு பேட்டியில் திருச்செல்வம் பேசும்போது, ஜீவானந்தம் கேரக்டர் கொஞ்ச நாளைக்கு என்பது போன்று தான் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது கதையின் முக்கியத்துவத்திற்கு தகுந்தது போல் கதை நகர்கிறது.
இனி கதை எப்படி செல்கிறதோ, ரசிகர்கள் எந்த அளவிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே கதாபாத்திரம் இருக்கும். ஆனால் மிகவும் அதிக நாட்கள் ஜீவானந்தம் கதாபாத்திரம் இருக்காது என்று கூறியுள்ளார்.
2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை- மொத்த கலெக்ஷன் விவரம்