சிவா மனசுல சக்தி 2-ம் பாகம் பற்றிய அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்
பிரதர்
சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற பல படங்களை கொடுத்த எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளிவர உள்ள படம் பிரதர்.

இப்படத்தில் ஜெயம் ரவியுடன், பிரியங்கா மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், பிரமோஷன் பணிகளில் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
சிவா மனசுல சக்தி 2 - ம் பாகம்
இந்நிலையில், இயக்குனர் எம் ராஜேஷ் பேட்டி ஒன்றில் ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் குறித்தும் சிவா மனசுல சக்தி படத்தை பற்றியும் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், "சிவா மனசுல சக்தி படத்தின் 2 - வது பாகத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இது குறித்து, நடிகர் ஜீவாவிடமும் பேசியுள்ளதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

பிரதர் படத்தின் ரிலீஸ்க்கு பின் இந்த படம் குறித்த அப்டேட் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.
ஜீவா, சந்தானம், ஊர்வசி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்த சிவா மனசுல சக்தி திரைப்படம் இன்றும் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட் படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri