திருவண்ணாமலை கோவிலில் இயக்குனர் வம்சி.. தமிழ் ரசிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வம்சி. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 11 -ம் தேதி வெளியானது.
இப்படத்திற்கு சிலர் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் பாக்ஸ் ஆபிசில் சாதனை வசூல் செய்து வருகிறது. வாரிசு திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 122 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருகின்றது. மொத்த வசூல் விரைவில் 300 கோடியை தொட வாய்ப்பிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் கூறி இருக்கின்றனர்.
தமிழ் ரசிகர்கள்
தற்போது இயக்குணர் வம்சி அவருடைய குடும்பத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பத்ரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், " நான் அண்ணாமலையார் கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய வந்தேன். வாரிசு படத்திற்க்கு நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி.”
”மேலும் என்னை சப்போர்ட் செய்த மீடியா நண்பர்களுக்கும் நன்றி. தமிழ் ரசிகர்கள் என் மீது வைத்த அன்பிற்காக சுவாமி அண்ணாமலையாரிடம் நன்றி தெரிவித்தேன்” என்று கூறினார்.
பல கோடிகள் லாபத்தை அள்ளி கொடுத்த துணிவு.. செம மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
