30 வருடங்களுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! அஜித், விஜய், சூர்யா பட இயக்குனரின் அதிரடி!
அஜித், விஜய், சூர்யா என மூவருமே தமிழ் சினிமா துறையில் தற்போது கொடி கட்டிப்பறக்கிறார்கள். தெலுங்கு சினிமாவிலும் இவர்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
இவர்களின் ஆரம்ப கால படங்கள் இன்னும் மக்கள் மனதில் மாறாத நினைவு தடங்களை கொண்டது. நேருக்கு நேர் படத்தை இதில் குறிப்பிட்டு சொல்லலாம். அஜித், விஜய் இருவரும் இணைந்து நடித்த இப்படத்தை வசந்த் இயக்கியிருந்தார்.
அஜித் 18 நாட்கள் மட்டுமே இப்படத்தில் நடிக்க அதன் பின் கால்ஷீட் சிக்கலால் படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக சூர்யா நடித்திருந்தார்.
படமும் வெற்றி பெற்றது. இயக்குனர் வசந்த சில படங்களே இயக்கியிருந்தாலும் ஆழமாக ரசிகர்கள் மனதில் பதிந்தவர்.
அஜித்தின் ஆசை படத்தையும், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தையும் இயக்கியிருந்தார்.
கேளடி கண்மணி என்ற தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும், ஆசை படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதையும் வென்ற வசந்த் நீ பாதி நான் பாதி, அப்பு, ரிதம், சத்தம் போடாதே, மூன்று பேர் மூன்று காதல் என படங்களை இயக்கினார்.
இந்நிலையில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அவர் 30 வருடங்கள் கழித்து புதிய படத்தில் தன்னுடைய கேளடி படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்துள்ளாராம்.