இயக்குநர் விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை கோவிலில் திடீர் சாமி தரிசனம்..
விக்னேஷ் சிவன்
நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் போடா போடி. இப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் விக்னேஷ் சிவன்.
முதல் படமே அவருக்கு ஒரு பெயர் பெற்றுக் கொடுத்தாலும் அவர் மிகவும் பிரபலம் ஆனது நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம். அதன்பின் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் இயக்கியவர் கடைசியாக 2022ம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கினார்.
இப்படமும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும், பாடலாசிரியராகவும் வலம் வருகிறார். தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற LIK படத்தை இயக்கி வருகிறார்.
திடீர் தரிசனம்
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துள்ளார். தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.