Disclosure Day திரை விமர்சனம்

Report

உலகளவில் இயக்குனர்களின் GOAT என கொண்டாடப்படும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் எமிலி போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள Disclosure Day படம் எப்படி உள்ளது? பார்ப்போம்.

Disclosure Day திரை விமர்சனம் | Disclosure Day Movie Review

கதைக்களம்

டேனியல் கெல்னர் என்பவர் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு டிவைஸ் எடுத்துகொண்டு தன் காதலி ஜேன் உடன் கவர்மெண்ட் இண்டலிஜன்ஸ் டீம்-டமிருந்து தப்பித்து ஓடுகிறார், அவரை எப்படியாவது பிடிக்க வேண்டும் அவர் கையில் இருக்கும் சில அதிர்ச்சிகரமான வீடியோ மற்றும் டிவைஸ் ஒன்றை கைப்பற்ற அவரை அரசாங்கத்தில் உள்ள மிலிட்ரி சிலர் துரத்துகின்றனர்.

Disclosure Day திரை விமர்சனம் | Disclosure Day Movie Review

அதே நேரத்தில் செய்தி வாசிப்பாளராக இருக்கு எமிலி ப்ளண்ட் திடீர் திடீரென தனக்கு தெரியாத மொழிகள் எல்லாம் பேசுகிறார், திடீரென ஏதேதோ சிக்னல் செய்கிறார். அதோடு மற்றவர்கள் கண்களை பார்த்தே என்ன நடந்தது என்ன நடக்க போகிறது என்பதை கூறுகிறார்.

Disclosure Day திரை விமர்சனம் | Disclosure Day Movie Review

இந்நிலையில் எமிலிக்கு தன்னுடன் யாரோ Communicate செய்கிறார்கள் என்பதை உணர்கிறார், இதை அறிந்த அரசாங்கம் எமிலி, கெல்னர் இருவரையுமே துரத்த இருவருமே தங்களின் நோக்கங்களை நிறைவேற்றினார்களா என்பதே மீதிக்கதை. 

படத்தை பற்றிய அலசல்

ஸ்டீவன் ஸ்பில்பேர்க் நம் குழந்தை பருவத்தை ET, ஜுராஸிக் பார்க், இந்தியான ஜோன்ஸ் போன்ற பல அற்புத படைப்புகளை கொடுத்து ஹாகிவுட் சினிமாவை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர், பல வருடம் கழித்து ஏலியன் கான்செப்ட் உடன் மீண்டும் வர், நான் இன்றும் கிங் என நிரூபித்துள்ளார்.

நடிகர்கள் பெர்ப்பாமன்ஸ் எல்லோருமே சிறப்பாக செய்துள்ளனர், படம் ஆரம்பித்து அரை மணி நேரம் முழுவதும் என்ன நடக்கிறது என தெரியாமல், என்ன பேசிக்கொண்டே இருக்கிறார்கள் போல் இருந்தாலும் கதைக்கு தேவை, அதை கவனித்தால் தான் படம் புரியும் என்பது போல் பல விஷயங்களை உரையாடலாகவே இயக்குனர் காட்டியுள்ளார்.

Disclosure Day திரை விமர்சனம் | Disclosure Day Movie Review

Backrooms: திரை விமர்சனம்

Backrooms: திரை விமர்சனம்

எமிலி செய்தி வாசிக்க முடியாமல் தடுமாறும் இடம், தன் காதலன் என்ன செய்ய போகிறான் என அறிந்து எஸ்கேப் ஆவது, கடைசியில் தன்னை ஏன் தொடர்பு கொண்டார்கள் என தெரியும் இடம் என அனைத்திலும் செம ஸ்கோர் செய்துள்ளார்.

படத்தில் கெல்னத், ஜேன் என இரண்டு கதாபாத்திரம் மிக முக்கியமாக வருகின்றனர், இவர்கள் எல்லோரையும் Hugo என்பவர் ஒன்றினைத்து அவரே வழிநடத்துகிறார், அந்த தருணத்தில் கெல்னர் காதலி ஜேன்-யை டிவைஸ் மூலம் அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் கட்டுபடுத்தி கெல்னரையே கொல்ல முயற்சி செய்யும் காட்சி பதட்டத்தின் உச்சம்.

Disclosure Day திரை விமர்சனம் | Disclosure Day Movie Review

படத்தின் கடைசி 45 மணி நேரம் உச்சம் என்றே சொல்ல வேண்டும், ஒவ்வொரு சீன்-யும் ஸ்பில்பெர்க் செதுக்கியுள்ளார், கண்டிப்பாக இதை தியேட்டரில் பார்த்தால் மட்டுமே அந்த அனுபவத்தை பெற முடியும். டெக்னிக்கலாக இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சிஜி என அனைத்திலும் சிக்ஸர் தான். 

க்ளாப்ஸ்

கதை, திரைக்கதை

கடைசி ஒரு மணி நேர காட்சிகள்

டெக்னிக்கல் ஒர்க்

நடிகர், நடிகைகள் பங்களிப்பு

பல்ப்ஸ்

படத்தின் ஆரம்பத்தில் உள்ள டாக்கீ போஷன்ஸ், சிலருக்கு பொறுமையை சோதிக்கலாம்.

மொத்தத்தில் ஸ்பீல்பெர்க்- ஏலியன் என்றாலே அது திரையுலகின் ஒரு அசாத்திய படைப்பாக தான் இருக்கும் என இதிலும் நிரூபணம் ஆகியுள்ளது.

Disclosure Day திரை விமர்சனம் | Disclosure Day Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US