பிரபாஸ் ஜோடியாகும் முன்னணி பாலிவுட் ஹீரோயின்
பிரபாஸ் பாகுபலி படங்களுக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர்நடிப்பில் சமீபத்தில் வந்த ராதே ஷியாம் பிளாப் ஆனது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஆதிபுருஷ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சலார் படத்தை கேஜிஎப் இயக்குனர் இயக்குகிறார் என்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு இருக்கிறது.
அதுமட்டுமின்றி மகாநடி பட இயக்குனர் நாக் அஷ்வின் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த படம் தற்போது ப்ராஜக்ட் கே என அழைக்கப்பட்டு வருகிறது.
இதை தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் மற்றொரு ஹீரோயின் ரோலில் திஷா பதானி தற்போது நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதை அந்த நடிகையும் உறுதியாக அறிவித்து உளளார்.