ஒரே காரில் ஜோடியாக வந்து விவாகரத்து கேட்ட ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி! நீதிமன்றத்தில் என்ன நடந்தது
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் விவாகரத்தை அறிவித்தனர்.
அவர்கள் பிரிவதாக அறிவித்தாலும் concertகளில் ஒன்றாக பாடி வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அது பற்றி கேட்டபோது "நாங்கள் ரொம்ப professional. ஒருவருக்கொருவர் மீது மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதைக்காக நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்" என தெரிவித்தார் ஜி.வி. பிரகாஷ்.
ஒரே காரில் கோர்ட்டுக்கு..
இந்நிலையில் அவர்களது விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே காரில் கோர்ட்டுக்கு வந்தனர்.
பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்புவதாக நீதிபதியிடம் அவர்கள் கூறிய நிலையில் விசாரணை முடிந்து ஒன்றாக காரில் ஏறி கிளம்பி சென்றனர்.
விவாகரத்து பெற ஜோடியாக அவர்கள் வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் - பாடகி சைந்தவி ஆகியோர் பரஸ்பரம் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய நிலையில், வழக்கு விசாரணையை நீதிபதி செல்வ சுந்தரி ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து ஒரே காரில் இருவரும் புறப்பட்டுச் சென்றனர். #GVPrakash #Saindhavi pic.twitter.com/kOp7QyVoM6
— Idam valam (@Idam_valam) March 24, 2025

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
