தனுஷ் - ஐஸ்வர்யா போல விவகாரத்தில் முடிந்த பிரபலங்களின் வாழ்க்கை ! யார் யார் தெரியுமா?
சினிமாத்துறையில் மிகவும் பிரபலமாக இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதாவது நடந்தால் பெரியளவில் பேசப்படும்.
அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே பெரிய நட்சத்திரங்கள் பலரும் தங்களின் மனைவி அல்லது கணவரை பிரிவதாக அறிவித்து வருகின்றனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா
அதன்படி நேற்று சற்றும் எதிர்பார்க்கதாக நிலையில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிரிவதாக அறிவித்து இருந்தார். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது என்றே கூறலாம்.
கடந்த 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா - நாக சைதன்யா
மிகவும் பிரபலமான நடிகர்களாக இருந்த சமந்தா - நாக சைதன்யா கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே திரைப்படங்களில் சமந்தா நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் சர்ச்சையாக பேசப்பட்டதை தொடர்ந்து இந்த நட்சத்திர ஜோடிகள் பிரியவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.
பின் கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிவதாக அறிக்கையை வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.

அரவிந்த் சாமி - காயத்ரி
நடிகர் அரவிந்த் சாமி காயத்ரி ராமமூர்த்தி என்பவரை கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 16 வருட திருமண வாழ்க்கைக்கு பின் இவர்கள் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மேலும் விவகாரத்திற்கு பின் தனது மகள் மற்றும் மகனின் வளர்ப்பு பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டார் அரவிந்த் சாமி.

பிரபு தேவா - ரம்லத்
நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா ரம்லத் என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரிந்த மூத்த மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக மரணடைந்தார்.
பின் பிரபு தேவாவுடன் பிரபல நடிகை கிசுகிசுக்கப்பட்டதால் அவரின் மனைவி வழக்கு தொடர்ந்தார். இதனால் பிரபு தேவா - ரம்லத் 2011-ல் விவாகரத்து பெற்றனர்.
