அதிகாலை கோவிலுக்கு சென்ற 'பாக்கியலட்சுமி' திவ்யா கணேஷ்.. ஆனால் இப்படி ஆகிடுச்சே
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி. அந்த தொடரில் ஜெனி என்கிற ரோலில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ். அவருக்கு இந்த தொடர் மூலமாக பெரிய ரசிகர் கூட்டம் கிடைத்து இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிகிறது. சீரியலில் அவர் கிறிஸ்தவ பெண்ணாக நடித்தாலும் நிஜத்தில் அவர் ஹிந்து தான். இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் மற்றொரு நடிகை உடன் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
ஆனால் அங்கே அதிகம் பேர் இரவில் இருந்தே காத்திருந்ததனால் கோவிலுக்கு உள்ளே கூட செல்ல முடியவில்லையாம். அதனால் கோவிலுக்கு வெளியில் இருந்தே சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பி இருக்கின்றனர். அதன் பின் மாங்காட்டில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஷூட்டிங் சென்று இருக்கின்றனர்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
