விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ்
பிக் பாஸ் 9ம் சீசனில் டைட்டில் வின்னர் ஆக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இறுதியில் சபரி மற்றும் திவ்யா மட்டும் இருந்தபோது திவ்யாவின் கையை தூக்கி விஜய் சேதுபதி அவரை டைட்டில் வின்னர் ஆக அறிவித்தார்.
அவரிடம் டைட்டில் டிராபியை விஜய் சேதுபதி கொடுத்தபிறகு அவர் எமோஷ்னலாக பேச தொடங்கிவிட்டார்.

பட்ட அவமானம்
"என்னோட முதல் ட்ராபி இது. நிறைய சேனலில் வேலை செய்திருக்கிறேன். நிறைய கேரக்டரில் நடித்து இருக்கிறேன். எல்லா விருது விழாவுக்கும் போவேன். இந்த வருஷம் விருது கிடைக்கும், அடுத்து வருஷம் கிடைக்கும் என காத்திருப்பேன்."
"என்னை நாமினேட் செய்வார்கள், ஆனால் விருது கொடுக்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் மற்றவர்கள் விருது வாங்கி வைத்திருந்தால் கூட அந்த ட்ராபியை தொட்டு பார்க்க வேண்டும் என ஆசை வரும். ஆனால் நான் தொட மாட்டேன். எனக்கென வரும்போது தொட்டு பார்க்கலாம் என காத்திருந்தேன்."
"பிக் பாஸ் வாய்ப்பு வந்தபோது எனக்கு தெரிந்தவர்கள் எல்லோரும் போக வேண்டாம் என்று தான் சொன்னார்கள். ஆனால் இது பெரிய வாய்ப்பு, ஒரு முறை தான் கிடைக்கும். அது கிடைக்கும்போதே பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். ட்ராபியை எதிர்பார்த்து நான் வரவில்லை. எனக்கான ஒரு இடம் இதில் இருந்து வெளியில் வரும்போது கிடைக்கவேண்டும் என விரும்பினேன்."
"பிக் பாஸ் வீட்டில் நான் நானாக இருந்ததால் கிடைத்த இந்த வெற்றியை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என திவ்யா கணேஷ் கண்கலங்கி பேசினார்.
