மிகவும் வேதனையான கட்டத்தை கடக்கிறேன்... தனது அம்மா குறித்து சத்யராஜ் மகள் திவ்யா
சத்யராஜ்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் சத்யராஜ்.
இவரது மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார், மகிழ்மதி என்ற இயக்கத்தின் மூலம் கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார்.
இவரது அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
உருக்கமான பதிவு
இந்த நிலையில் திவ்யா சத்யராஜ் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், கடந்த சில ஆண்டுகளாக அம்மாவின் உடல்நிலை காரணமாக வாழ்க்கை சவாலாக மாறியது.
வீட்டில் ஐசியூவை வைத்து கோமா நோயாளியைக் கவனிப்பது கடினமானது. ஆனால் எனது பெற்றோரைப் பாதுகாக்க எது வேண்டுமானாலும் செய்வேன். நானும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் வேதனையான கட்டத்தை கடந்து வருகிறேன்.
ஊட்டச்சத்து நிபுணராக எனது வெற்றி வாழ்க்கை முன்னேற வைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
