எனக்கு பலமுறை திருமணம் செய்து விட்டனர்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா
தமிழ், கன்னடம் மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான பொல்லாதவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்த பிறகு வாரணம் ஆயிரம் என சில படங்களில் நடித்து வந்தார்.
தற்போது முழு நேர அரசியலில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
திருமண வதந்தி
திவ்யாவை சுற்றி ஏகப்பட்ட வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அந்த வகையில் அவர் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார் என பொய்யான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,41 வயதாகும் திவ்யா திருமணம் செய்துகொண்டார் என்று தற்போது மீண்டும் தகவல்கள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில், ”எனக்கு பலமுறை மீடியா மக்கள் திருமணம் செய்து விட்டனர். எனக்கு உண்மையாகவே திருமணம் நடைபெறும் நிலையில் கண்டிப்பாக நானே சொல்வேன் அதுவரை இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற வதந்திளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.