41 வயதில் சிங்கிளாக வலம்வரும் நடிகை திவ்யா ஸ்பந்தனாவின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி?
திவ்யா ஸ்பந்தனா
கன்னடத்தில் அபி என்ற படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை திவ்யா ஸ்பந்தனா.
பின் தமிழில் சிம்புவின் குத்து படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான இவர் அடுத்து சுந்தர்.சி இயக்கிய கிரி படத்தில் நடித்து நல்ல வெற்றியை கண்டார். அதன்பிறகு அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் பொல்லாதவன்.
வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அந்த வெற்றிப்படத்தை தொடர்ந்து திவ்யா கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.
இப்படி தமிழில் தொடர்ந்து வரிசையாக ஹிட் படங்களில் நடித்துவந்த ரம்யா திடீரென அரசியலில் குதித்தார்.
கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த திவ்யா தற்போது சில பிரச்சனைகள் காரணமாக கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
சொத்து மதிப்பு
41 வயதிலும் சிங்கிளாகவே வலம் வரும் நடிகை திவ்யா அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
சினிமா, அரசியல் என வலம் வந்த நடிகை திவ்யாவிற்கு ரூ. 5 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.