இடுப்புக்கு கீழே சர்ஜரி செய்தேனா.. நடிகை திவ்யபாரதி ட்ரோல்களுக்கு பதிலடி
திவ்யபாரதி
ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் திவ்யபாரதி. அவரது நடிப்புக்கு நல்ல பாராட்டுகளும் கிடைத்தது.
சினிமாவுக்கு வரும் முன்பு மாடலிங் செய்து வந்த அவர் இன்ஸ்டாக்ராமில் அதிகம் பாப்புலாராகவே இருக்கிறார். திவ்யபாரதி இன்ஸ்டாவில் அதிகம் கவர்ச்சியாக தற்போது வெளியிடும் போட்டோக்கள் அதிகம் வைரல் ஆகின்றன.
இருப்பினும் அவரது தோற்றத்தை பார்த்து சிலர் ட்ரோல் செய்கிறார்கள். Fanta bottle structure, skeleton, Big butt girl என்றெல்லாம் என்னை ட்ரோல் செய்கிறார்கள் என திவ்யபாரதி கூறி உள்ளார்.
ட்ரோல்களுக்கு பதிலடி
நான் ஹிப் pad பயன்படுத்துகிறேனா அல்லது இடுப்பில் சர்ஜரி செய்து கொண்டேனா என கேட்கிறார்கள். நான் கல்லூரியில் படுக்கும்போதே பலரும் என்னை விமர்சிப்பார்கள். எனக்கே என் உடலை பிடிக்காமல் போய்விட்டது. எல்லோர் முன் நடக்க கூட பயந்தேன்.
"இது என் தவறு இல்லை, என் pelvic bone அமைப்பே அப்படி இருக்கிறது. 2015ல் நான் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மாடலிங் செய்தபோது எனக்கு பலரும் என்னை பாராட்டினார்கள். அதற்கு பிறகு தான் எனக்கு confidence வந்தது" என திவ்யபாரதி தெரிவித்து இருக்கிறார்.
சிம்பு திருமணம் செய்ய இவர் தான் பெண் பார்த்து கொடுக்கணும்