ரசிகர்களிடம் பிரபலமான திவ்யா கள்ளச்சி யூடியூப் வருமானம்.. எவ்வளவு தெரியுமா?
வெளியே சென்று வேலை செய்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற காலத்தை தாண்டி வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்ற காலம் எப்போதோ வந்துவிட்டது.
அப்படி வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஒரு சிறந்த முடிவு தான் யூடியூப், தங்கள் வீட்டில் நடப்பது, மக்களுக்கு தெரியாத விஷயம் காண்பிப்பது என யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு பலர் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில், யூடியூப் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆன ஒருவரை பற்றி தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அவர் தான் யூடியூபர் திவ்யா கள்ளச்சி.
திவ்யா கள்ளச்சி:
சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியே பிரபலமானவர் தான் யூடியூபர் திவ்யா கள்ளச்சி. யூடியூபில் கார்த்திக் மாமாவை வைத்து பல வீடியோ செய்து அதன் மூலம் திடீர் டிரெண்டானார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் 'Kallachi family' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். திவ்யா கள்ளச்சி யூடியூப்பில் நான்குக்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கிறார். இதில் இரண்டு சேனல்களில் தான் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்.
சொத்து மதிப்பு:
இந்நிலையில், தற்போது, யூடியூப் மூலம் திவ்யா கள்ளச்சி எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது குறித்து பார்க்கலாம்.
அந்த வகையில், வீடியோ பதிவிடுவதன் மூலம் திவ்யா கள்ளச்சிக்கு மாதம் ரூ. 20 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் வருகிறதாம். இதுமட்டுமின்றி, பிற யூடியூப் சேனல்களுக்காக 10க்கும் மேற்பட்ட வீடியோக்களில் நடித்தும் வருகிறார்.
அதில் ஒரு வீடியோவுக்கு ரூ. 8 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகிறாராம். இதன் அடிப்படையில் யூடியூப் மூலம் மட்டுமே அவருக்கு மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் வருகிறதாம். அதன்படி, இந்த Youtube சேனலின் மொத்த நெட் ஒர்த் $334 - $7.5K இருக்கும் என கூறப்படுகிறது.