எலிமினேட் செய்யப்பட்ட திவாகர்.. கதறி அழுத பார்வதி.. வெளிவந்த வீடியோ இதோ
திவாகர் எலிமினேட்
வழக்கமாக ஒருவர் எலிமினேஷன் ஆகப்போகிறார் என்பது குறித்து தகவல் வெளிவந்தாலும் கூட, அவர் எலிமினேட் ஆவதை பெரும்பாலும் புரோமோ வீடியோவாக வெளிவராது.

ஆனால், தற்போது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் எலிமினேட் ஆகியுள்ள வீடியோவை விஜய் தொலைக்காட்சி புரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். திவாகர் வெளியேறுகிறார் என்று தெரிந்தவுடன் கதறி அழுகிறார் பார்வதி. நீ இல்லாமல் நான் என்ன செய்யப்போகிறேன் என கூறுகிறார்.

வெளியே வந்த திவாகரிடம், உங்களுக்கு என்னிடம் சொல்ல ஏதாவது இருக்கிறதா?' என கேட்கிறார். அதற்கு திவாகர் 'உங்களுக்கு விஜய் சேதுபதி சார் உடல்மொழி வருது என கூறுகிறார்கள்" என சொல்கிறார்.

சீக்ரெட் அறை?
திவாகரின் வெளியேற்றம் புரோமோ வீடியோவில் வந்த நிலையில் அவர் சீக்ரெட் அறைக்கு செல்வார் என நெட்டிசன்கள் சிலர் இணையத்தில் கூறி வருகிறார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே தெரியும்.
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan