தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ
தீபாவளி ஸ்பெஷல்
தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள்.
அப்படி வருகிற நவம்பர் 12ம் தேதி தீபாவளி கொண்டாட்டம் உள்ளது, எனவே தொலைக்காட்சிகளில் புதுப்படங்களை ஒளிபரப்ப உள்ளார்கள்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு எக்கச்சக்கமான புதுப்படங்களை சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவை போட்டிபோட்டு ஒளிபரப்ப உள்ளன.
அதன் லிஸ்ட்டை தற்போது பார்க்கலாம்.
விஜய் டிவி
தீபாவளி ஸ்பெஷலாக சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன போர் தொழில், அதேபோல் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து தயாரித்த பிச்சைக்காரன் 2 திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
சன் டிவி
சன் டிவி தயாரித்து பிரம்மாண்ட வெற்றி கண்ட ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
ஜீ தமிழ்
இந்த டிவியில் நடிகர் விஷாலின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த மார்க் ஆண்டனி படத்தை ஒளிபரப்ப உள்ளார்களாம்.