அதர்வா நடிப்பில் வெளிவந்த DNA படத்தின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை கோடியா
DNA
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஈட்டி, இமைக்கா நொடிகள், கணிதன், பரதேசி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் DNA. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் DNA திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, DNA திரைப்படம் கடந்த 8 நாட்களில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
