DNA திரை விமர்சனம்
அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகியுள்ள DNA திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.
கதைக்களம்
காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அதர்வாவினால், அவரது தம்பியின் திருமணம் தடைப்பட்டு இருக்கிறது.
இதனால் அவரை சரி செய்ய மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புகிறார்கள். அங்கு அவர் மனமாற்றம் அடைந்து வீடு திரும்ப, நிமிஷாவை பெண்பார்க்க அழைத்து செல்கிறார்கள்.
நிமிஷாவிற்கு மனநலம் சார்ந்த பிரச்சனை ஒன்று இருப்பதை அதர்வாவிடம் மறைத்து அவரது அப்பாவே திருமணத்தை ஏற்பாடு செய்கிறார்.
எனினும் நபர்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வர நிமிஷாவின் பரிதவிப்பைப் பார்த்து அதர்வா அவரையே திருமணம் செய்து கொள்கிறார்.
பின்னர் அவர்கள் வாழ்க்கையை தொடங்க ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. ஆனால் மருத்துவமனையில் வேறொரு குழந்தையை கொண்டு வந்து, அதர்வாவின் குழந்தையை யாரோ திருடி செல்கிறார்கள்.
நிமிஷாவுக்கு மட்டும் இது தனது குழந்தை இல்லை என்று தெரிந்து கேட்க, அவரை யாரும் நம்பவில்லை. ஆனால் அதர்வாவிற்கு சந்தேகம் ஏற்பட்டு பிரைவேட் ஆக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறார்.
அதில் அவரது குழந்தை இல்லை என்று தெரிய வர, தனது குழந்தையை தேட ஆரம்பிக்கிறார். அவர் குழந்தையை கண்டுபிடித்தாரா? அதன் குற்றப் பின்னணி என்ன என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வாவும், நிமிஷாவும் போட்டி போட்டு நடித்துள்ளனர். ஆனாலும், நிமிஷா நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.
குறிப்பாக என் குழந்தை எங்கே என்று கேட்கும் காட்சி, மாற்றன் பிள்ளையை கொடுத்துவிட்டு கவலைப்படும் காட்சிகளில் எதார்த்த நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
நெல்சன் வெங்கடேசனின் திரைக்கதையில் திரில்லர் போர்ஷனை விட எமோஷானல் போர்ஷன் அதிகம் கனெக்ட் ஆகிறது.
அதர்வா தேர்ந்தெடுத்த நடிப்பில் ஆக்ஷன் மற்றும் எமோஷனல் என ஆல் ஏரியாவிலும் கலக்குக்கிறார்.
சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கை, குழந்தை இல்லாதவர்களின் ஏக்கம் என பல விஷயங்களை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
சேத்தன், பாலாஜி சக்திவேல், விஜி, ரமேஷ் திலக் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். குழந்தையை கடத்தும் பாட்டி ஒரு சீனில் மிரட்டிவிட்டு செல்கிறார்.
ஜிப்ரானின் பின்னணி இசை சிறப்பு. படத்தின் பல காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
க்ளாப்ஸ்
கதை
திரைக்கதை
நடிப்பு
இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் அதர்வாவுக்கு ஒரு சிறந்த படம். கண்டிப்பாக இந்த DNAவை குடும்பத்துடன் ரசிக்கலாம்.
ரேட்டிங் : 3.25/5

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
