மம்மூட்டி நடிக்க வரும் முன் என்ன தொழில் செய்தார் தெரியுமா? பலருக்கும் தெரியாத விஷயம்
நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருபவர். மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் அவர் நடித்த பல படங்கள் பெரிய ஹிட் ஆகி இருக்கின்றன.
கடந்த சில மாதங்களாக மம்மூட்டிக்கு உடல்நிலை மோசமான நிலையில் அவர் சிகிச்சையில் இருந்தார். தற்போது குணமடைந்து இருக்கும் அவர் மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
நடிக்க வரும் முன்..
மம்மூட்டி நடிக்க வரும் முன்பு என்ன வேலை செய்தார் என உங்களுக்கு தெரியுமா. அவர் பிஏ மற்றும் எல்எல்பி ஆகிய படிப்புகளை முடித்துவிட்டு மூன்று வருடம் வக்கீல் ஆக பணியாற்றினாராம்.
அதன் பிறகு படங்கள் நடிக்க தொடங்கியதால் அவர் அந்த தொழிலை விட்டுவிட்டார். மம்மூட்டி நடிக்க வரவில்லை என்றால் ஒரு பெரிய கிரிமினல் லாயர் ஆகி இருப்பார் என குடும்பத்தினரே கூறுகின்றனர்.