23 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு சிறை தண்டனை? உண்மை இதுதான்..

By Kathick Nov 24, 2023 08:27 AM GMT
Report

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனாலும் கூட தான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என உறுதியாக இருந்தார்.

ஆனால், இன்று நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், இவர் திரிஷா குறித்து பேசிய நாளில் இருந்த திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து ஒவ்வொரு தகவல்களும் வெளியாகிறது.

திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..

திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..

23 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு சிறை தண்டனை? உண்மை இதுதான்.. | Do You Know Mansoor Alikhan Jailed 7 Years In Case

அதே போல் தற்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வழக்கு குறித்து முழுமையான விவரம் என்னவென்று பார்க்கலாம்..

7 ஆண்டுகள் சிறை தண்டனை

கடந்த 1996ஆம் ஆண்டு சினேகா ஷர்மா என்ற பெண் ஒருவர் மன்சூர் அலிகான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சினேகா ஷர்மா மன்சூர் அலிகானின் உதவியாளர் ஆவார்.

இந்த சம்பவம் நடந்தபோது சினேகா ஷர்மாவிற்கு 23 வயது தான். தன்னிடம் அடிக்கடி மோசமாக நடந்துகொள்ள மன்சூர் அலிகான் முயற்சி செய்ததாகவும். ஒரு நாள் Juice-ல் மாத்திரை கலந்து கொண்டு பலாத்காரம் செய்ததாகவும் மன்சூர் அலிகான் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார். 1998ல் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. அப்போது வழக்கு கொடுத்திருந்த சினேகா ஷர்மாவிற்கு குழந்தை ஒன்று பிறந்தது.

23 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு சிறை தண்டனை? உண்மை இதுதான்.. | Do You Know Mansoor Alikhan Jailed 7 Years In Case

இதை தொடர்ந்து மன்சூர் அலிகான் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது உண்மை. அதோடு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தண்டனையில் அவர் நீண்ட காலம் சிறையில் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவருடைய 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீக்கப்பட்டது. மேலும் சினேகா ஷர்மாவிற்கு ரூ. 3.5 லட்சமும், பெண் குழந்தைக்கு ரூ. 7 லட்சமும் இழப்பீடு கொடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.  

ஆனால், இதற்குப்பின் தான் மிகப்பெரிய திருப்பம் இந்த வழக்கில் நடந்தது.  

உண்மையை கண்டுப்பிடித்த வழக்கறிஞர்

1995ஆம் ஆண்டு சினேகா ஷர்மா மீது சிவசுரேஷ் என்பவர் வழக்கு ஒன்றை கொடுத்திருந்தார். இதை மன்சூர் அலிகான் வழக்கறிஞர் கண்டுபிடித்துள்ளார். சினேகா ஷர்மா எதிராக சிவசுரேஷ் கொடுத்து வழக்கில், 'சினேகா ஷர்மாவிற்கும் தனக்கும் குழந்தை பிறந்துவிட்டது எங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என சிவசுரேஷ் வழக்கு கொடுத்துள்ளார்.

சிவசுரேஷ் - சினேகா ஷர்மா இருவருக்கும் கடந்த 24.8.1994ல் திருமணம் நடந்துவிட்டதாகவும் மன்சூர் அலிகானின் வழக்கறிஞர் கண்டுபிடித்துள்ளார். இதன்பின் மீண்டும் மன்சூர் அலிகான், சினேகா ஷர்மா மீது வழக்கு தொடுத்தார்.

23 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு சிறை தண்டனை? உண்மை இதுதான்.. | Do You Know Mansoor Alikhan Jailed 7 Years In Case

இந்த வழக்கில் சினேகா ஷர்மா ஒரு கன்னி பெண் என்று தான் எனக்கு எதிரான வழக்கில் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. அவர் என் மீதி வைத்த வாதம் தவறானது. எனக்கு எதிரான அவரின் வழக்கும் பொய்.

என் மீதி அவமதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை தொடுத்துள்ளார் என்றும், என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய சினேகா ஷர்மா தனக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால், இதுகுறித்து சினேகா ஷர்மா கடைசி வரை எந்த ஒரு பதிலும் தன் சார்பில் இருந்து அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US